Recommendations
Recent Activity
போலீஸ்காவல் முடிந்தது:திவாகரன் மீது மேலும் 2 வழக்கு
திருத்துறைப்பூண்டி, பிப்.23-
 
திருவாரூர் மாவட்டம் ரிஷியூரை சேர்ந்த ஒரு பெண்ணின் வீடு இடிக்கப்பட்ட வழக்கில் சசிகலாவின் தம்பி திவாகரன் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
 
இந்த வழக்கில் திவாகரனை நீடாமங்கலம் போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி எடையூரை சேர்ந்த சரவணன் என்பவரை கடத்தி, மிரட்டி ரூ.1லட்சம் பறித்த வழக்கில் எடையூர் போலீசார் திவாகரனிடம் தீவிர விசாரணை நடத்தினர். போலீஸ்காவல் முடிந்ததை தொடர்ந்து திவாகரன் நேற்று பகல் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
 
இந்த வழக்கில் திவாகரனின் காவல் இன்றுடன் முடிவடைவதால் அவர் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் இன்று ஆஜர் செய்யப்படுகிறார்.
 
இந்த நிலையில் ரிஷியூரை சேர்ந்த தமிழார்வன், கஸ்துரி ஆகியோர் தங்களை 3 பேர் தாக்கியதாக நீடாமங் கலம் போலீசில் புகார் கொடுத்தனர். இந்த வழக்கில் திவாகரன் மீது மேலும் 2 வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
 
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் திவாகரன் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனுக்களை நீதிபதி சுந்தரேஸ் விசாரித்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.