Recommendations
Recent Activity
குஜராத்தில் 6 பாகிஸ்தானியர்கள் கைது
கட்ச்,பிப். 23-
 
குஜராத் மாநிலத்தின் வடக்கு கடற்கரைப்பகுதியான கட்ச் மாவட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் சர்வதேச கடல் எல்லை உள்ளது. நேற்று எல்லைப்பாதுகாப்புப்படையின் கடலோரப்பிரிவினர் ரோந்து வந்தபோது இந்திய-பாகிஸ்தான் கடல் எல்லையின் சர்-கிரீக் பகுதி அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் படகு இருப்பதை கண்டு அதன் அருகே சென்றனர். அங்கு 6 பேர் இருந்ததை தொடர்ந்து அவர்களை கைது செய்தனர். மேலும்  அவர்கள் வந்த படகினையும் பறிமுதல் செய்தனர்.   
 
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. உடனடியாக அவர்கள் உள்ளூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
 
புஜ் நகர போலீசார் அவர்களை இன்று கூட்டு ஒருங்கிணைப்பு விசாரணை மையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்துவார்கள் என்று எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.