Recommendations
Recent Activity
கிலானி மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கு: 28-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
இஸ்லாமாபாத், பிப். 23-
 
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை மீண்டும் நடத்துவது குறித்த வழக்கில், பிரதமர் கிலானி கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்தவில்லை எனக் கூறி அவரை கோர்ட் அவமதிப்பு குற்றவாளியாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
 
இந்த அவமதிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும், எனக் கோரிய கிலானியின் மனுவை சமீபத்தில் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
 
இதனையடுத்து, இந்த வழக்கில் அட்டர்னி ஜெனரல் அன்வர் உல் ஹக், அரசுத் தரப்பு வழக்கறிஞராக செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
 
இதனைத் தொடர்ந்து, நேற்று நடந்த விசாரணையில், கிலானிக்கு எதிரான ஆதாரங்களை அட்டர்னி ஜெனரல் அன்வர் உல் ஹக் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அன்வர் சமர்ப்பித்த ஆதாரங்களை நீதிபதி நசீர் உல் மாலிக் தலைமையிலான ஏழு பேர் கொண்ட பெஞ்ச் ஆராயக்கூடும் எனக் கருதப்படுகிறது.
 
இந்த அவமதிப்பு வழக்கை இம்மாதம் 28-ம் தேதிக்கு, அந்நாட்டு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.