Recommendations
Recent Activity
பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் விடுதலையானார்
மும்பை, பிப். 22-
தாஜ்மஹல் ஓட்டலில் தெற்கு ஆப்பிரிக்க தொழிலதிபர் இக்பால் ஷர்மா என்பவரை பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் தாக்கியதாக மும்பையின் கோல்பா காவல் துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இதனை தொடர்ந்து சயீப் அலிகானை அவரது வக்கீல் அறையில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் சயீப் அலிகான் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் சயீப் கூறியதாவது-
 
இந்த விவகாரத்தில் நீதி வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. ஓட்டலில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ள காட்சிகள் உண்மையை சொல்லும். நேற்று இரவு என் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை தடுக்கும் முயற்சியில்  நான் ஈடுபட்டேன்.
 
இதனை தொடர்ந்து போலீசார் ஓட்டல் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ள காட்சிகளும் சோதனை செய்யப்படுகின்றன.