Recommendations
Recent Activity
சிரியாவில் ராணுவம் குண்டு வீசி தாக்குதல்: 2 பத்திரிகையாளர்கள் பலி
சிரியா,பிப்.22-

சிரியாவில் ராணுவத்திற்கும் புரட்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்றறு வருகிறது. இன்று ஹோம்ஸ் நகரில் பாதுகாப்புப் படையினருக்கும் புரட்சியாளர்களுக்குமிடையே நடந்த மோதலில், இரண்டு பத்திரிகையாளர்கள் தங்கியிருந்த வீட்டில் மர்ம நபர்களால் குண்டு வீசப்பட்டது.

குண்டு வீச்சிலிருந்து தப்புவதற்காக வீட்டிலிருந்து வெளியேறினர். அப்போது அவர்கள் மீது ராக்கெட் குண்டு வீசப்பட்டது. இதில் இருவரும் உயிரிழந்தனர். உயிரிழந்த பத்திரிக்கையாளர்களில் ஒருவர் மேரி கால்வின். அமெரிக்காவை சேர்ந்த இவர் சண்டே டைம்ஸ் இதழில் நிருபராக பணியாற்றி வந்தவர்.

மற்றொருவரான ரெமி ஒச்லிக், பிரான்ஸ் பத்திரிக்கையின் புகைப்படக்கலைஞர் ஆவார். இந்த படுகொலைக்கு உலகிலுள்ள பத்திரியாளர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.