சேலம் மாவட்டத்தில் பீர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரிப்பு: 20 நாளில் ரூ.35 கோடிக்கு மது விற்பனை
Salem
புதன்கிழமை,
பெப்ரவரி 22,
5:11 PM IST
0
கருத்துக்கள்
சேலம், பிப் 22-
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகம் கொளுத்தி வருகிறது. ஆனால் இன்று காலை கடும்பனி பெய்தது. அதிகாலை ஜில்லென்று காற்று வீசியது.
தொடர்ந்து வெயில் அதிகம் அடித்து வருவதால் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர் விற்பனை அதிகரித்து வருகிறது. இதுதவிர சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அஸ்வின் கோட்னீஸ், கூடுதல் சூப்பிரெண்டு ஈஸ்வரன், துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர்கள் பூபதிராஜன், சம்பத், சீனிவாசன் மற்றும் மதுவிலக்குப்பிரிவு போலீசாரும், அந்தந்த பகுதி உள்ளூர் போலீசாரும் இணைந்து சாராய வியாபாரிகளை கைது செய்தும், கள் விற்பவர்களை கைது செய்தும் வருவதாலும் டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர் மற்றும் மதுபானங்கள் அதிகம் விற்கப்பட்டு வருகிறது.
கடந்த 20-ம் தேதி வரை பீர் மற்றும் மதுபானங்கள் ரூ.35 கோடிக்கு விற்று புதிய சாதனை புரிந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 9 கோடி அதிகமாகும். 20-ம்தேதி வரை பிராந்தி வகைகள் 87 ஆயிரத்து 812 பாக்ஸ் விற்கப்பட்டுள்ளது. இது 77 சதவீதம் ஆகும்.
பீர்வகைகள் 54ஆயிரத்து 355 பாக்ஸ் விற்கப்பட்டுள்ளது. இது 119 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டை விட பீர் 11 பாக்ஸ் அதிகம் விற்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 2 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகள் விடுமுறை விடப்பட்டு இருந்தும் மதுபானங்கள் அதிகம் விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
0
கருத்துக்கள்