ஆலந்தூர், ஜன. 22-
சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில். பழைய இரும்பு வியாபாரி.
இவருக்கு அடிக்கடி மர்ம போன் வந்தது. அதில் பேசிய வன் பணம் தரவேண்டும். இல்லையென்றால் குழந் தையை கடத்தி செல்வேன் என்று மிரட்டினான்.
பலமுறை வந்த இந்த மிரட்டல் போனால் அதிர்ச்சி அடைந்த இஸ்மாயில் இது குறித்து பரங்கிமலை போலீசில் புகார் செய்தார்.
பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ் பெக்டர் நாசர் தலைமையில் போலீ சார் விசாரணை நடத்தினார்கள்.
மீண்டும் பணம் கேட்டு மிரட்டல் வந்தபோது போலீசார் கூறிய யோசனைப்படி அந்த மர்ம நபரை ராமாவரம் வருமாறு தெரிவிக்கப்பட்டது.
போனில் மிரட்டியவன் ராமாவரம் வந்தபோது போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவனது பெயர் குமார் என்றும், விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியைச் சேர்ந்த வன் என்பது தெரிய வந்தது.
குமார் வேலையில்லாமல் ஊர் சுற்றி வந்தான். அவனது நண்பன் வீரப்பன் வியாபாரி இஸ்மாயிலிடம் கார் டிரைவராக இருக்கிறான்.
இஸ்மாயிலிடம் அதிக பணம் இருப்பதாக வீரப்பன் தனது நண்பன் குமாரிடம் கூறி இருக்கிறான். அவனது யோசனைப்படிதான் குமார் போனில் பணம் கேட்டு மிரட்டியது தெரிய வந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.