Recommendations
Recent Activity
சென்னை மாநகராட்சி சார்பில் ஆயிரம் ஓட்டல்கள் திறக்கப்படும்: தீர்மானம் நிறைவேறியது
சென்னை, பிப். 22-
 
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடந்தது.கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
சென்னையில் ஓட்டல்கள் திறக்கும் தீர்மானமும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
 
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குடிசை பகுதிகளில் வாழ்பவர்கள் கூலி வேலை செய்பவர்களாக இருப்பதால் அவர்கள் வாழ்வாதாரம் ஏற்றத் தாழ்வாக உள்ளது. இவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள்.   இவர்களது ஏழ்மையை கருத்தில் கொண்டு சென்னையில் ஆயிரம் இடங்களில் சிறிய ஓட்டல்கள் திறக்கப்படும்.
 
இந்த ஓட்டல்களில் சுகாதாரமான உணவு சுத்தமாக வழங்கப்படும். இந்த திட்டத்தில் கல்லூரி, பள்ளிகளில் படித்து விட்டு வேலை தேடும் இளைஞர்கள், தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் பயன் அடைவார்கள்.