Recommendations
Recent Activity
அவினாசியில் மாரியம்மன் கண் திறந்ததாக பரபரப்பு
அவினாசி, பிப். 22-

அவினாசி பி.எஸ்.சுந்தரம் வீதியில் சமயபுரத்து மாரியம்மன் கோவில் உள்ளது. வழக்கம்போல் நேற்று இரவு பூஜை முடிந்ததும் கோவில் அர்ச்சகர் நடையை பூட்டி விட்டுச் சென்றுவிட்டார்.

அதன் பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் 9.30 மணி அளவில் அம்மனை தரிசிக்க வந்தார். அப்போது கோவிலின் மூலஸ்தானத்தில் திரைச்சீலை தொங்கிக் கொண்டிருந்தது. சுரேஷ் கண்ணை மூடியபடி மனமுருக அம்மனை வேண்டினார். அவர் கண்ணை திறந்தபோது கோவிலில் அம்மன் முன் தொங்கி கொண்டிருந்த திரைச்சீலை விலகி இருந்ததாகவும், அம்மன் கண்ணில் இருந்து ஒளி வட்டம் தெரிவதாகவும் கூறி பரவசமடைந்தனர்.

பின்னர் அவர் ஊருக்குள் வந்து மற்றவர்களிடம் கூறினார். அவர்களும் கோவிலுக்கு விரைந்து வந்தனர். சிலர் சுரேஷ் சொல்வது போல் ஒளிவட்டம் தெரிவதாக கூறி ஆனந்தமடைந்தனர். தானாக திரைச்சீலை விலகி அம்மன் கண் திறந்ததாக கூறப்படும் சம்பவம் அவினாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.