பிரிஸ்பேன்,பிப்.21-
வெறும் பீல்டிங் மட்டும் அணியின் வெற்றிக்கு உதவாது என்று டோனியின் சுழற்சிமுறை குறித்து சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். முத்தரப்பு தொடரில் கேப்டன் டோனி டாப்-3 வீரர்களை சுழற்சி முறையில் களமிறக்கி வருகிறார். இதற்கு பல முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அணியின் பீல்டிங்கை வலுப்படுத்தவே மூத்த வீரர்களில் ஒருவருக்கு ஓய்வு கொடுத்து, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதாக கேப்டன் டோனி கூறியிருந்தார். இந்நிலையில் இன்றைய போட்டியில் டோனிக்கு பதிலாக கேப்டனாக இருந்த சேவாக், பீல்டிங் பற்றி டோனி எங்களிடம் எதுவும் கூறவில்லை.
இளம் வீரர்கள் 2015-ல் இங்கு நடக்கும் உலககோப்பையில் விளையாட வேண்டியிருப்பதால் அவர்களுக்கு வாய்ப்பளிப்பதாகக் கூறினார். மேலும் வெறும் பீல்டிங்கை வைத்து ஒன்றும் செய்யமுடியாது என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே கேப்டன் டோனிக்கும்,சேவாக்கிற்கும் மோதல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் சேவாக்கின் இக்கருத்து இருவருக்கிடையேயான மோதலை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.