குமாரபாளையம் அருகே
மினி பஸ் மோதி பெண் பரிதாப சாவு
Namakkal
திங்கட்கிழமை,
பெப்ரவரி 20,
11:00 PM IST
0
கருத்துக்கள்
குமாரபாளையம், பிப்.20-
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சரஸ்வதி (வயது 43). இவர் நேற்று குமாரபாளையம் அருகே உள்ள கல்லாங்காட்டு வலசில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டுக்கு வந்தார். அப்போது உப்புக்குளம் ரோடு பகுதியில் நின்று கொண்டு இருந்த சரஸ்வதி மீது, பள்ளிபாளையத்தில் இருந்து குமாரபாளையம் நோக்கி சென்ற மினி பஸ் ஒன்று மோதியது.
இந்த விபத்தில் கீழே விழுந்த சரஸ்வதியின் தலையில், பஸ்சின் முன்புற சக்கரம் ஏறியது. இதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே சரஸ்வதி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
0
கருத்துக்கள்