பல் ஈறுகளில் வலியா?
Chennai
திங்கட்கிழமை,
பெப்ரவரி 20,
1:54 PM IST
0
கருத்துக்கள்
சிலருக்கு பல் துலக்கும்போது பல் ஈறுகளில் இருந்து ரத்தம் கசியும். வலியும் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் உடனே பல் டாக்டரை பார்த்து சிகிச்சை பெறுவதுதான் நல்லது. ஈறுகளிலும் அவற்றின் அடியில் இருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்து விடும்.
அதனால் பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வரும். சில நேரங்களில் வலியும் ஏற்படும். இப்படிப்பட்டவர்கள், தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பதும் நல்லது. என்றாலும், பல் மருத்துவர் ஆலோசனை இன்னும் நல்ல பலன் தரும்.
0
கருத்துக்கள்