ஹெல்மெட்டில் பந்து தாக்கியது: தெண்டுல்கருக்கு ஸ்கேன் பரிசோதனை
பிரிஸ்பேன்
திங்கட்கிழமை,
பெப்ரவரி 20,
12:07 PM IST
1
கருத்துக்கள்
பிரிஸ்பேன், பிப். 20-
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான தெண்டுல்கர் தனது 100-வது சதத்தை அடிக்க முடியாமல் தொடர்ந்து நெருக்கடியில் உள்ளார். 3 நாடுகள் போட்டியில் அவரது ஆட்டம் தொடர்ந்து மோசமாக உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் 3 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
பெர்ட் லீ வீசிய பந்தில் தெண்டுல்கர் நேற்று மிகவும் தடுமாறினார். இதில் ஒரு பந்த ஹெல்மெட்டில் பலமாக தாக்கியது. தெண்டுல்கர் பந்தை தவறாக கணித்து தூக்கி அடிக்க முயன்றபோது அவரது ஹெல்மெட்டில் பந்து பட்டது. ஹெல்மெட்டில் பட்டு வந்த பந்தை பிடித்து ஆஸ்திரேலிய வீரர்கள் அப்பீல் கேட்டனர். நடுவர் இதை கவனித்து “அவுட்” கொடுக்கவில்லை.
பின்னர் அடுத்த ஓவரில் அவர் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் பெர்ட்லீ வீசிய பந்து ஹெல்மெட்டை தாக்கியதால் தெண்டுல்கருக்கு தலையில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் முன்எச்சரிக்கையாக அவருக்கு இன்று எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது.
1
கருத்துக்கள்