புதுடெல்லி, பிப். 20-
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2008-ம் ஆண்டு சீனா தலைநகர் பெய்ஜிங்கில் நடந்தது.
இந்த ஆண்டுக்கான (2012) ஒலிம்பிக் போட்டி லண்டனில் ஜூலை 27-ந்தேதி முதல் ஆகஸ்ட் 12-ந்தேதி வரை நடக்கிறது.
லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய துப்பாக்கி சுடும் அணியை தேசிய ரைபிள் சங்கம் அறிவித்து உள்ளது.
11 பேர் கொண்ட இந்த அணியில் ராஜ்வர்த்தன்சிங் ரத்தோர் இடம்பெறவில்லை.
ரத்தோர் 2004-ம் ஆண்டு ஏதன்ஸ் ஒலிம்பிக்கில் டபுள் டிராப் பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்றவர். பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று புதிய வரலாறு படைத்த அபினவ் பிந்த்ரா, ககன்நரங் போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
11 பேரை மட்டும் தேர்வு செய்ய வேண்டி இருப்பதால் ஹரிஒம்சிங், இம்ரான் ஹசன்கான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
லண்டன் ஒலிம்பிக்கில் விளையாடும் இந்திய துப்பாக்கி சுடும் அணி விவரம்:-
அபினவ் பிந்த்ரா (10 மீட்டர் ஏர்ரைபிள்) ககன்நரங் (10 மீட்டர், 50 மீட்டர் 3 பொஷிசன், 50 மீட்டர் புரோன்), சஞ்சீவ் ராஜ்புக் (50 மீட்டர் 3 பொஷிசன்) ஜாய்தீப் கரம்கர் (50 மீட்டர் புரோன்), விஜய்குமார் (ரேப்பிட் பயர் பிஸ்டல்), அனுராஜ்சிங், ஹீனாசிந்து (10 மீட்டர் ஏர்பிஸ்டல்) மனவஜித்சிங் சாந்துஹாசன் சவுத்ரி (டிராப்), ரஹி சரண்பேட் (25 மீட்டர் பிஸ்டல்), ரஞ்சன் சோதி (டபுள்டிராப்).