ஜெரூசலேம், பிப்.17-
லெபனான் நாட்டை சேர்ந்த ஹெஸ்புல்லா என்கிற தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. அதன் தலைவர் நஸ்ரல்லா கூறியிருப்பதாவது:-
இந்தியா மற்றும் ஜார்ஜியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் எங்கள் இயக்கத்தால் செய்யப்பட்டது அல்ல. இஸ்ரேல் படைவீரர்கள் மற்றும் தூதர்களை பழிவாங்கும் எண்ணம் இல்லை. மேலும், ஒரு தலைவரை பழிவாங்க பிற இஸ்ரேலிய மக்களை பழிவாங்குவதும் எங்கள் குறிக்கோள் அல்ல.