கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரும்:ரஷிய சிறப்பு தூதர் நம்பிக்கை || kudankulam issue will end soon russia special envoy confident
Logo
சென்னை 30-11-2015 (திங்கட்கிழமை)
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரும்:ரஷிய சிறப்பு தூதர் நம்பிக்கை
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரும்:ரஷிய சிறப்பு தூதர் நம்பிக்கை
சென்னை, பிப்.16-
 
இந்திய ரஷிய நட்புறவு கலாசார கழகம் மற்றும் இந்திய ரஷிய வர்த்தக சபை ஆகியவற்றின் சார்பில் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷிய விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது.
 
விழாவுக்கு ஐகோர்ட்டு நீதிபதி கே.என்.பாஷா தலைமை தாங்கினார். இந்திய ரஷிய நட்புறவு கலாசார கழகத்தின் பொதுச் செயலாளர் பி.தங்கப்பன் வரவேற்று பேசினார். கழகத்தின் தலைவர் கவிஞர் வைரமுத்து, துணைத் தலைவர் டாக்டர் பத்மா சுப்பிரமணியன், காப்பாளர் வி.ராமகிருஷ்ணன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், ரஷிய வர்த்தக சபையின் நிறுவனத் தலைவர் வி.எம்.லட்சுமிநாராயணன், தலைவர் ஆர்.வீரமணி, கே.வைத்தியநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினார். எழுத்தாளர் டி.ஜெயகாந்தனுக்கு ரஷிய விருதை ரஷிய கூட்டமைப்பின் இந்திய சிறப்பு தூதர் அலெக்சாண்டர் எம்.கடகின் வழங்கி பேசினார்.
 
அப்போது அவர் கூறியதாவது:-
 
தொழிலாளர்களுக்கு நீதி, சமத்துவம் மற்றும் உரிமை ஆகியவற்றுக்கு ஜெயகாந்தனின் படைப்புகள் முன்னிலையில் உள்ளன. உலகத்தின் தொன்மை மொழியான தமிழ் படைப்புகள் ரஷிய மொழியிலும் வெளியிடப்பட்டு உள்ளன. ரஷிய இலக்கியங்களை இந்தியாவில் வளர்த்த ஜெயகாந்தனுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
 
தமிழகத்தில் மின்சாரம், போக்குரத்து கட்டமைப்பு வசதிகள் மற்றும் மோட்டார் தொழிற்சாலைகள் ஆகியவற்றை தமிழகத்தில் கொண்டுவருவதற்கு ரஷியா பங்களித்துள்ளது. தமிழகத்துக்கு மிகவும் அத்தியாவசியமான மின்சார உற்பத்தியை முன்வைத்து கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின்நிலைத்தின் 2 யூனிட்டுகளை தொடங்குவது குறித்த பிரச்சினை விரைவில் முடிவுக்கு வந்து, அந்த 2 யூனிட்டுகளும் மின் உற்பத்தியை தொடங்கும்.
 
கூடங்குளம் அணுமின்நிலையமானது உலகிலேயே சிறந்த, நுட்பமான பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ திட்டத்திலும் ரஷியாவின் பங்களிப்பு உள்ளது. பொருளாதாரம், வர்த்தகம், தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி, கல்வி, கலாசாரம் ஆகியவற்றின் முன்னேற்றத்துக்காக இந்தியா ரஷியா, இடையே உள்ள நட்பும், கூட்டு முயற்சியும் வளர்ச்சி பெற்று வருகிறது.
உலகத்தை அச்சுறுத்தும் தீவிரவாதத்தை எதிர்ப்பதிலும், இந்தியாவுக்கு, ரஷியா உறுதுணையாக உள்ளது.
 
இவ்வாறு அவர் பேசினார்.
 
நிகழ்ச்சியில், ரஷிய கலாசார மையத்தின் இயக்குனர் வளதிமிர்மேரி, இந்திய ரஷிய நாட்டியம் மற்றும் இசை இல்லத்தின் கவுரவச் செயலாளர் சீர்காழி சிவ சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், இந்திய ரஷிய நட்புறவு கலாசார கழகத்தின் நிர்வாகி எம்.வி.ரெங்கராஜன் நன்றி கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: மூவர் கண்காணிப்புக் குழு

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை நெருங்கி வரும் நிலையில் மத்திய நீர்வள ஆணைய ....»

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif