தவறுக்கு நானே பொறுப்பு: காம்பீரின் ரன் அவுட் திருப்புமுனை கேப்டன் டோனி கருத்து || indian captain dhoni opinion gautam gambhir run out
Logo
சென்னை 13-02-2016 (சனிக்கிழமை)
தவறுக்கு நானே பொறுப்பு: காம்பீரின் ரன்-அவுட் திருப்புமுனை- கேப்டன் டோனி கருத்து
தவறுக்கு நானே பொறுப்பு: காம்பீரின் ரன்-அவுட் திருப்புமுனை- 
கேப்டன் டோனி கருத்து
அடிலெய்டு, பிப். 15-
 
3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதிய நேற்றைய பரபரப்பான ஆட்டம் டையில் முடிந்தது.   முதலில் விளையாடிய இலங்கை 50 ஓவரில் 9 விக் கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்தது. சண்டிமால் 81 ரன் எடுத்தார். வினய்குமார் 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். ரன் எடுப்பதற்கு சிரம
 
மான இந்த ஆடுகளத்தில் இந்தியாவும் திணறியது. ஒரு கட்டத்தில் இந்தியா 27.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன் என்ற மோசமான நிலையில் இருந்தது. 5-வது விக்கெட்டான காம்பீர் - கேப்டன் டோனி ஜோடி நிலைத்து நின்று சரிவை தடுத்தது.
 
40.3-வது ஓவரில் காம்பீர் 91 ரன்னில் ரன்- அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 178ஆக இருந்தது. டோனி கடைசி வரை கடுமையாக போராடினார். பரபரப்பாக நடந்த இந்த போட்டி இறுதியில் “டை”யில் முடிந்தது.
 
இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்தது. மலிங்கா வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றி 9 ரன் தேவைப்பட்டது. கைவசம் 2 விக்கெட் இருந்தது. டோனி முதல் பந்தில் 2 ரன்னும், 2-வது பந்தில் 1 ரன்னும் எடுத்தனர். 3-வது பந்தில் வினய்குமார் 1 ரன் எடுத்தார். 4-வது பந்தில் டோனி 1 ரன் எடுத்தார். அவரை “ரன்-அவுட்” செய்யும் வாய்ப்பை மலிங்கா தவறவிட்டார். 5-வது பந்தில் வினய்குமார் 1 ரன் அவுட் ஆனார். இதனால் உமேஷ் யாதவ் களம் வந்தார்.
 
கடைசி பந்தில் 4 ரன் தேவை. டோனி அந்த பந்தை “எக்ஸ்ட்ரா கவர்” திசையை நோக்கி தூக்கி அடித்தார். உபுல்தரங்கா எல்லை கோட்டில் அந்த பந்தை பவுண்டரிக்கு செல்ல விடாமல் தடுத்தார். அதற்குள் டோனியும், உமேஷ்யாதவும் 3 ரன் ஓடி விட்டனர். இதனால் பரபரப்பான ஆட்டம் “டை” யில் முடிந்தது. ஒருநாள் போட்டி வரலாற்றில் இந்தியாவின் 6-வது “டை” ஆகும்.  
 
இந்த ஆட்டம் குறித்து இந்திய அணி கேப்டன் டோனி கூறியதாவது:-
 
காம்பீரின் “ரன்-அவுட்” தான் ஆட்டத்தின் திருப்பு முனை. இதனால் நாங்கள் வெற்றியை இழந்தோம். காம்பீரின் ரன்-அவுட்டுக்கு நான்தான் பொறுப்பு. அவரை ஓட வருமாறு நான்தான் அழைத்தேன். அவரால் திரும்பி செல்வதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்தது. எனது தவறால் இந்த “ரன்-அவுட்” நடந்து விட்டது.
 
மலிங்காவின் பந்தை எதிர் கொள்வது சாதாரணமானது அல்ல. அவர் யார்க்கர் வீச்சில் சிறந்தவர். கடைசி பந்தை எதிர் கொள்ளும்போது மனதில் எதையும் வைத்து விளையாடவில்லை. நான் 6-வது வீரராக களம் இறங்கினேன். இந்த வரிசையில் நிலைத்து நிற்பது முக்கியமானது. விக்கெட்டுகள் விழுந்து விடாமல் இருக்கும் வகையில் நான் களத்தில் நிலைத்து நின்று ஆடினேன்.  
 
மலிங்கா வீசிய ஆட்டத்தின் 30-வது ஓவரில் 5 பந்தே வீசப்பட்டது. ஆடுகள நடுவர்களின் தவறால் அப்படி நடந்து விட்டது. 3-வது நடுவரும் அதில் தலையீடாமல் இருந்து விட்டார். நடுவர்கள், மேட்ச் ரெபரி, ஸ்கோரர் ஆகிய எல்லோரும் இதை கவனிக்க தவறி விட்டார். இது மனித தவறுதான். இதனால் நாங்கள் இதை பிரச்சினையாக்க விரும்பவில்லை. ஆனால் இது மாதிரியான நிகழ்வு மீண்டும் எங்களுக்கோ அல்லது வேறு எந்த அணிக்கோ வராது என்று நம்புகிறேன்.
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 48 ஓவரிலேயே போட்டியை முடித்து இருக்கலாம் என்று காம்பீர் கூறியது அவரது கருத்தாகும். 47 அல்லது 48 ஓவர் என்பது முக்கியமல்ல. 50 ஓவரில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிந்ததில் தான் மகிழ்ச்சி. இது விஷயத்தில் ஒவ் வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அதில் தவறு இல்லை.
 
ஷேவாக்கிடம் கேட்டால் 35 ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து விட விரும்புகிறேன் என்றது. இதனால் எங்களுக்குள் எந்த விஷயத்தில் தவறான பிரச்சினை எதுவும் இல்லை.
 
இவ்வாறு டோனி கூறியுள்ளார்.
 
டோனி 69 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 58 ரன் எடுத்து ஆட்டநாயகன் விருதை பெற்றார்.   இந்திய அணி 5-வது “லீக்” ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 19-ந்தேதி எதிர் கொண்டது.
 
இலங்கை அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 17-ந்தேதி சந்திக்கிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

இலங்கை அணிக்கு பதிலடி: பந்து வீச்சாளர்களுக்கு டோனி பாராட்டு

ராஞ்சி, பிப். 13–இலங்கைக்கு எதிரான 2–வது 20 ஓவர் போட்டியில் வென்று இந்திய அணி பதிலடி ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif