10 ஆயிரம் ரன்னை தவறவிட்ட சங்ககரா
Chennai
செவ்வாய்க்கிழமை,
பெப்ரவரி 14,
11:48 AM IST
0
கருத்துக்கள்
இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சங்ககரா இந்தியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 10 ஆயிரம் ரன்னை தவறவிட்டார். அவர் இன்று 42 ரன்கள் எடுத்தால் 10 ஆயிரம் ரன்னை எடுத்திருப்பார். ஆனால் 31 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் 11 ரன்னில் அவர் வாய்ப்பை இழந்தார்.
அடுத்து வரும் போட்டியில் அவர் 10 ஆயிரம் ரன்னை எடுப்பார். சங்ககரா 314 போட்டியில் விளையாடி 9989 ரன் எடுத்துள்ளார். சராசரி 37.98 ஆகும். அதிகபட்ச ரன் 138 ஆகும். 12 சதமும், 67 அரைசதமும் அடித்துள்ளார். இலங்கை வீரர்களில் ஜெயசூரியா (13,430), ஜெயவர்த்தனா (10,131) ஆகியோர் 10 ஆயிரம் ரன்னுக்கு மேல் எடுத்துள்ளனர். சங்ககரா 3-வது இலங்கை வீரர் என்ற பெருமையை பெறுவார்.
0
கருத்துக்கள்