Recommendations
Recent Activity
கைப்பந்து போட்டி: தமிழக அணிகள் காலிறுதிக்கு தகுதி
சென்னை, பிப். 11-
14-வது தேசிய இளையோர் கைப்பந்து போட்டி கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழக அணி 25-7, 25-15, 25-16 என்ற நேர் செட்டில் டெல்லியை தோற்கடித்தது. இதன் மூலம் 4-வது வெற்றியை பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.
 
தமிழக அணி கால் இறுதியில் அரியானாவை சந்திக்கிறது. இதே போல் பெண்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் தமிழக அணி 25-13, 25.6, 25-4 என்ற நேர் செட்டில் குஜராத் அணியை எளிதில் தோற்கடித்து 4-வது வெற்றி பெற்றது. இதன் மூலம் தமிழக அணி கால் இறுதிக்குள் நுழைந்தது.