Recommendations
Recent Activity
உத்தரபிரதேச முதல் கட்ட தேர்தலில் 62 சதவீதம் வாக்குபதிவு: தேர்தல் ஆணையம்
லக்னோ, பிப்.8-
 
உத்தரபிரதேசத்தில் 55 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை அமைதியாக நடைபெற்றது.
 
வாக்குப்பதிவையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. உத்தரபிரதேசத்தின் முதல்கட்ட வாக்குப்பதிவில் 62 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.