திருத்துறைப்பூண்டியில் தொடர் திருட்டு: ரூ.1 லட்சம் நகையுடன்
வாலிபர் கைது
Thiruvarur
புதன்கிழமை,
பெப்ரவரி 08,
7:16 PM IST
0
கருத்துக்கள்
திருத்துறைப்பூண்டி, பிப். 8-
திருத்துறைப்பூண்டி நாடார் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி வளர்மதி (வயது 45). இவர்ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மகள் திருமணம் நடந்து இரண்டு தினங்களாகிறது. திருமண பெண்ணுக்கு போட்ட நகைகளை இரவில் வீட்டில் வைத்து விட்டு தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது யாரோ ரூ. 1லட்சம் மதிப்புள்ள நகை, 2 செல்போன்களை திருடி சென்று விட்டனர். காலையில் எழுந்து பார்த்த வளர்மதி பதறிபோய் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலைத்தில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், குற்றபிரிவு போலீசார் ராஜேந்திரன், குணசேகரன் ஆகியோர் சந்தேகத்திற்கிடமாக புதிய பஸ் நிலையத்தில் நின்ற திருத்துறைப்பூண்டி ஆபிஷேக கட்டளை தெருவை சேர்ந்த விஜயகுமாரை கைது செய்து விசாரணை செய்தனர்.
அவர் நகைகளை திருடியது தெரியவந்தது. அவரிடமிருந்து நகைகளை கைப்பற்றிய போலீசார் அவர்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்
0
கருத்துக்கள்