Recommendations
Recent Activity
தீவிரவாதிகளை எதிர்க்க புலனாய்வு அடிப்படையில் அணுக வேண்டும்: ப.சிதம்பரம்
கர்கோன், பிப்.8-
 
மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகளுக்கான உளவுத்துறை பயிற்சிக்கான முதல் பள்ளியை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று துவங்கி வைத்தார். விழாவில் அவர் உரையாற்றியபோது:-
 
கிளர்ச்சியாளர்கள் மற்றும் மாவோயிஸ்ட்களை எதிர்கொள்ள மிகவும் மாறுபட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது. ஏனெனில் மாவோயிஸ்ட்கள் போன்ற நிரந்தர போராட்ட படைகளுக்கெதிராக போராட நீண்ட நேரம் ஆகிறது. இவை எல்லாம் ரிசர்வ் படை மேல் கூடுதல் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகின்றன. மேலும், எதிரிகளின் செயல்பாடுகள் குறித்த புலனாய்வை உருவாக்க வேண்டும்.
 
பொது நடவடிக்கை திட்டங்களை மேற்கொள்ள மக்களின் ஆதரவை பெற வேண்டும். மேலும், ரிசர்வ் படை நிறைய நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு (பட்டாலியன்) பட்டாளத்திலும் ஒரு புலனாய்வு குழு நிச்சயமாக தேவைப்படும் என கூறினார். நக்சல் தீவிரவாத்துக்கு எதிராக 70,000-க்கும் மேற்பட்ட வீரர்களை ரிசர்வ் படை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.