Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
ஊழல், ஏற்றுமதி, ஒழுக்ககேடு, கலெக்டர், கலெக்டர் ராஜாராமன் எச்சரிக்கை நடவடிக்கை சிலிண்டர், கழிவுநீர் கால்வாய் குப்பை நவீன இயந்திரம், காரைக்குடி அதிமுக கவுன்சிலர் கொலை மிரட்டல், காரைக்குடி கல்லூரி மாணவி மாயம் போலீசார் விசாரணை, காரைக்குடி காதல் தகராறு கல்லூரி மாணவி கொலை கடிதம், காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் தெப்ப உற்சவம், காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோவில் தேரோட்டம் பக்தர்கள், காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் இயக்குனர் விஜயமோகனன் கே.பிள்ளை பதவி ஏற்பு, காரைக்குடி மின்னல் பெண் பலி, காரைக்குடி வேளாண்மை கல்லூரி சோழன் சித.பழனிச்சாமி எம்.எல்.ஏ., தேவகோட்டை
சிவகங்கை மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை: கலெக்டர் ராஜாராமன் தகவல்
சிவகங்கை, பிப். 8-
 
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்ட கூட்டமைப்புகளுக்கான சிறப்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் ராஜாராமன், தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தின் சார்பில் ஆ.தெக்கூர், செங்குளம், புதுக்குறிச்சி மற்றும் மருதிப்பட்டி ஆகிய நான்கு ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் வீதம் ஊக்கத்தொகைகளை கலெக்டர் ராஜாராமன் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-  
 
சிவகங்கை மாவட்டத்தில் ஆறு மாதங்கள் நிறைவடைந்து மறு சீரமைக்கப்பட்ட கூட்டமைப்புகளில் இதுவரையில் மொத்தம் 75 கூட்டமைப்புகளுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் வீதம் ரூ.75 லட்சம் மதிப்பீட்டிலான ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 122 கூட்டமைப்புகளுக்கு ஆறு மாதங்கள் முடிவடைந்தவுடன் தர மதிப்பீடு செய்து தலா ஒரு லட்சம் வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது.
 
இந்த தொகையை கொண்டு கூட்டமைப்பு மூலமாக அந்தக் கிராமங்களுக்கு தேவைப்படும் தொழில் முறைகளைக் கண்டறிந்து சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொடங்கி அதன் மூலமாக லாபம் ஈட்டி வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். தையல் தொழில் பயிற்சி பெற்றுள்ளகூட்டமைப்புகளுக்கு ஆடைகளை தயார் செய்திடவும் அதனை சந்தைப்படுத்திடவும் மகளிர் திட்ட செயலாக்க அலகு தகுந்த ஏற்பாடுகள்செய்து தர வேண்டும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
இந்நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் (பொ) சர்புதீன், உதவி திட்ட அலுவலர்கள் செல்வராஜ், சாந்தசீலன் மற்றும் அருணா ஆகியோர் கலந்து கொண்டனர்.