சுகாதார பாதுகாப்பில் கூட்டு முயற்சி வேண்டும்: தமிழக ஆளுநர் ரோசையா
Chennai
புதன்கிழமை,
பெப்ரவரி 08,
5:50 PM IST
0
கருத்துக்கள்
சென்னை, பிப்.8-
சென்னையில், மாநகர அகர்வால் கண் மருத்துவமனையின் 55-வது ஆண்டு விழாவில் தமிழக ஆளுனர் ரோசையா கலந்து கொண்டார். விழாவில் உரையாற்றியபோது:-
சுகாதார துறையில் அரசு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்கத்தக்கன. வீடுகளுக்கு சென்று மருத்துவ உதவி அளிக்கும் கூட்டு முயற்சியில் அரசுடன் இணைந்து சிறப்பு மருத்துவமனைகள், மருத்துவர்கள், அரசு சாராத சமூகப்பணியாளர்கள் பணியாற்ற வேண்டும்.
கிராமப்புரங்களில் கண் சிகிச்சைக்கான முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் கூடுதல் கண் மருத்துவமனைகள் உள்ளன. கண் மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றுகின்றனர்.
கண் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெற்றோர் மாணவர்களின் பார்வை குறைபாட்டை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்க கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். அகர்வால் மருத்துவமனை 55 பள்ளிகளில் இலவச கண் பரிசோதனை முகாம்கள் நடத்தி வருவது பாராட்டுக்குறியது என கூறினார்.
0
கருத்துக்கள்