Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
அணுமின் நிலையம் பணி இடிந்தகரை வாலிபர் போராட்ட குழு தாக்குதல், அணுமின்நிலையம், அத்தியூத்து சாலை கிணறு விபத்து அரசு, அதிகாரி பேச்சுவார்த்தை கூடங்குளம் போராட்டக்குழு, அம்பை கடன் பெண் பணம் மோசடி ஆலங்குளம் பெண் கைது, அரசுடன் பேச்சுவார்த்தை நீதிபதி ஏ.பி.ஷா நால்வர் குழு கூடங்குளம் போராட்டக்குழு அறிவிப்பு, ஆலங்குளம், ஆலங்குளம் குளம் குத்தகை தொடர் மோதல் அரிவாள் வெட்டு, ஆலங்குளம் டெங்கு காய்ச்சல் அம்மன் பொங்கல் வழிபாடு, ஆலங்குளம் மினி பஸ் மோதி கல்குவாரி தொழிலாளி சாவு, இடிந்தகரை அணு உலை போராட்டம் வெற்றி சீமான், இடிந்தகரை பொதுமக்கள் ஊர்வலம் உதயகுமார், இருவர், சங்கரன்கோவில், நெல்லை
நெல்லை கலெக்டர் அலுவலக்தில் மோதல்: ஜெயிலில் அடைக்கப்பட்ட இந்துமுன்னணியினர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை
நெல்லை, பிப்.7-

கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை தொடர்பாக மத்திய- மாநில குழுக்களுக்கு இடையேயான 4-ம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த 31-ந்தேதி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அப்போது கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களுக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதுதொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிந்து இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயகுமார், நெல்லை மாவட்ட செயலாளர் உடையார் உள்ளிட்ட 11 இந்து முன்னணியினர், இந்து தேசிய காங்கிரசை சேர்ந்த அதன் தலைவர் மதுசூதன பெருமாள், முருகானந்தம் உள்பட 3பேர் ஆகிய 14பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 14 பேரும் ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் 14 பேரும் தங்களை ஜாமீனில் விடுவிக்கக்கோரி நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுணை விசாரித்த நீதிபதி ராஜ், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயகுமார் உள்பட 14 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மோதலின்போது பொருட்களை சேதப்படுத்தியதற்காக ரூ5 ஆயிரம் டெபாசிட் கட்ட வேண்டும், கோவில்பட்டியில் தங்கியிருந்து அங்குள்ள போலீஸ் நிலையத்தில் தினமும் காலை மற்றும் மாலையில் கையெழுத்து போடவேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் 14பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி ராஜ் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

கோர்ட்டு உத்தரவு ஸ்ரீவைகுண்டம் கிளை சிறைக்கு சென்றதும் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள். இந்த வழக்கில் கைது செய்யப் பட்டவர்கள் தரப்பில் வக்கீல்கள் ராஜேந்திரன், பாலாஜி கிருஷ்ணமூர்த்தி, குற்றாலநாதன் ஆகியோர் ஆஜரானார்கள்.