Recommendations
Recent Activity
உச்சிதனை முகர்ந்தால் திரைப்பட மறு வெளியீட்டு விழா
புகழேந்தி தங்கராஜின் 'உச்சிதனை முகர்ந்தால்' திரைப்படத்தின் மறு வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு சென்னை தி.நகர் முத்துரங்கன் சாலையில் நடைபெறுகிறது. இரா. நல்லக்கண்ணு தலைமை தாங்குகிறார். தமிழருவி மணியன் அறிமுக உரையாற்றுகிறார்.

கவிஞர் காசி ஆனந்தன், புலவர் புலமைப்பித்தன், இயக்குநர் சேரன், தாமரை, கொளத்தூர் மணி, ஜவாஹி ருல்லா, வேல்முருகன், பெ. மணியரசன், திருச்சி வேலுச் சாமி, தியாகு வாழ்திப் பேசு கிறார்கள். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிறைவு உரையாற்றுகிறார். இரா. திருமலை வரவேற்கிறார். ம. வெங்கட்ராமன் நன்றி கூறுகிறார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் செய்துள்ளது.