Recommendations
Recent Activity
குடிபோதையில் தீக்குளித்த வியாபாரி சாவு
திருவண்ணாமலை, பிப். 8-
 
திருவண்ணாமலை அடுத்த தேனிமலை பகுதியை சேர்ந்தவர் கணேசன். நாட்டு மருந்து வியாபாரி இவருக்கு குடிபழக்கம் இருந்தது. சம்பவதன்று மாலை கணேசன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். திடீரென்று மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.
 
அலறி துடித்த அவரை மீட்டு திருவண்ணாமலை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கணேசன் இறந்தார்.
 
இதுகுறித்து திருவண்ணாமலை போலீசார் விசாரிக்கிறார்கள்.