பக்கத்து வீட்டில் பேசியதை கண்டித்ததால் மனைவி தீக்குளித்து சாவு: கணவர் கைது
Thiruvallur
புதன்கிழமை,
பெப்ரவரி 08,
4:14 PM IST
0
கருத்துக்கள்
பெரியபாளையம்,பிப்.8-
பெரியபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கண்டிகையை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 32). லோடுமேன். இவரது மனைவி ராஜலட்சுமி (27). சம்பவத்தன்று ராம மூர்த்தி வேலைக்கு சென்று திரும்பி வந்த போது, ராஜலட்சுமி பக்கத்து வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இதனை ராமமூர்த்தி கண்டித்தார். இது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மனவேதனை அடைந்த ராஜலட்சுமி தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார்.பலத்த தீக்காயம்அடைந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ராஜலட்சுமியின் தந்தை சுப்பிரமணி பெரியபாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரில், மகள் சாவுக்கு கணவர் ராம மூர்த்திதான் காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் வழக்கு பதிவு செய்து ராமமூர்த்தியை கைது செய்தார்.
0
கருத்துக்கள்