Recommendations
Recent Activity
சென்னையில் இருந்து ஆங்காங்குக்கு ரூ.6 லட்சம் வெளிநாட்டு பணம் கடத்தல்: கர்நாடக வாலிபர் கைது
ஆலந்தூர், படிப். 5-
 
சென்னையில் இருந்து ஆங்காங்குக்கு செல்லும் விமானம் இன்று அதிகாலை 3 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது.  அதில் செல்ல இருந்த பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
 
கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த அயூப் (37) என்பவர் ஒரு சூட்கேசுடன் வந்தார்.  அந்த சூட்கேசை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அமெரிக்க டாலர், யூரோ பணம் ஆகியவை இருந்தது. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.
 
இந்த பணத்தை வெளிநாட்டுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து கடத்தல் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அயூப்பை போலீசார் கைது செய்தனர்.  
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெர்மன் மற்றும் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் மற்றும் யூரோ பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
 
விசாரணையில் அது ஹவாலா பணம் என்று தெரிய வந்தது. எனவே இதுவும் ஹவாலா பணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.