Recommendations
Recent Activity
சொத்து தகராறு வழக்கு: உ.பி. காங். வேட்பாளர் கைது
லக்னோ, பிப். 5-
 
உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் ஜஸ்வந்த் நகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர், அஜய் யாதவ். சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முலாயம்சிங் யாதவின் இளைய சகோதரருமான ஷிவயில் சிங்கும் இதே தொகுயில்தான் போட்டியிடுகிறார். இவருக்கு கடும் போட்டியை கொடுப்பதற்காகவேதான் அஜய் யாதவ் இந்த தொகுதியில் நிறுத்தப்பட்டார்.  
 
இவருக்கும், சகோதரர் அனில்யாதவுக்கும் சொத்து தகராறு உள்ளது. இது தொடர்பான வழக்கு லக்னோவில் உள்ள முதன்மை மாஜிஸ் திரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு இரண்டு மூன்று முறை சம்மன் அனுப்பியும் அஜய் யாதவ் ஆஜராகவில்லை.
 
இதையடுத்து, கடந்த மாதம் 23-ந்தேதி, அஜய்யாதவுக்கு எதிராக ஜாமீன் வெளிவர முடியாத கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.   இந்த உத்தரவை அடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். பத்து நாட்களுக்கும் மேலாக அவரை போலீசார் தேடிவந்தனர்.
 
நேற்று உறவினர் வீட்டில் மறைந்திருந்த அவர் கைது செய்யப் பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பின்னர் நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இவர் முன்னாள் மத்திய மந்திரி பல்ராம்சிங் யாதவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.