Recommendations
Recent Activity
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: ப.சிதம்பரத்தின் மீதான குற்றம் கண்டுபிடிக்கப்படவில்லை- சி.பி.ஐ
புதுடெல்லி, பிப்.4-
 
2ஜி வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் குற்றவாளியாக சேர்க்கப்பட வேண்டும் என சுப்பிரமணிய சாமி மனுதாக்கல் செய்திருந்தார். அவரது மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி சைனி இன்று வழக்கினை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
 
இந்த வழக்கு குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கூறியிருப்பதாவது:-
 
2ஜி வழக்கில் முறையாக விசாரணை நடத்தி உள்ளதாகவும், இதுவரை ப.சிதம்பரத்தின் மேல் எந்த குற்றமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.
 
ப.சிதம்பரத்தை இந்த வழக்கில் சேர்க்காமல், ஆ. ராசா மீதான வழக்கின் விசாரணை மார்ச் மாதம் 17-ந்தேதி தொடங்கும் என நீதிமன்றம் கூறியுள்ளது.