மாலை மலர் செய்தி எதிரொலி- விராலிமலையில் தேரோடும் வீதிகள் சீரமைப்பு
Pudukkottai
சனிக்கிழமை,
பெப்ரவரி 04,
5:47 PM IST
0
கருத்துக்கள்
விராலிமலை, பிப். 4-
விராலிமலையில் தேரோடும் வீதிகள் சீரமைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பிரசித்திப்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் தைபூசம், வைகாசி விசாகத்தையொட்டி தேரோட்டம் நடந்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான தைப்பூச தேரோட்டம் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கபடும் இந்த தேர் தேரோடும் வீதிகளில் அசைந்தாடி வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஆனால் தற்போது தேரோடும் வீதிகள் அனைத்தும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் தேரோட்டம் நடைபெறுமா? என்று பொது மக்கள் ஆழ்ந்த கவலையில் இருந்தனர்.
இதுபற்றிய செய்தி மாலை மலர் இதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதனை தொடர்ந்து விராலிமலை நெடுஞ்சாலை துறை அதிகாரி சின்னம்மாள் அதிரடி நடவடிக்கை எடுத்தார். அதன்படி தேரோடும் வீதிகள் அனைத்தும் போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட்டார்.
அதன்படி தேரோடும் வீதிகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்ததோடு நெடுஞ்சாலை துறை அதிகாரியை பாராட்டி உள்ளனர்.
0
கருத்துக்கள்