மாத்தூர், பிப். 4-
திருச்சி பாரதிதாசன் பல்கலை கழகத்தில் இருந்த ஐ.ஐ.எம். நிறுவனத்திற்கு ஏற்கனவே நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
தற்போது 22 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி ஐ.ஐ.எம்.நிறுவனத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக பல்கலை கழக பணியாளர்கள் சங்கம், ஆசிரியர்கள் சங்கத்தினருக்கு தகவல் கிடைத்தது.
இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நிலம் வழங்குவதை கண்டித்து பல்கலை கழக பணியாளர்கள் சங்கத்தினர் பல்கலை கழகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பணியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆசிரியர் சங்க செயலாளர் நடராஜ சீனிவாசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.