Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
அ.தி.மு.க. அரசு ஆண்டு சாதனை ஆத்தூர் கூட்டம் தீர்மானம், அதிமுக இளைஞர் பாசறை ஏழை மக்கள் பணி அமைச்சர் நத்தம் விசுவநாதன், இலங்கை தமிழர்கள் பிரச்சினை இந்தியா நாஞ்சில் சம்பத் பேச்சு, ஊத்து பண்ணைக்காடு பிளம்ஸ் பேரிக்காய் விற்பனை, என்ஜினீயர் வீடு, ஐ.பெரியசாமி, ஒட்டன்சத்திரம் அ.தி.மு.க. அரசு சாதனை, கலால்துறை கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி வெள்ளோடு, கலெக்டர் கடத்தல் கல்லூரி பிரார்த்தனை, கள்ளத்தொடர்பு போலீஸ் தி.மு.க. நிர்வாகி கொலை, கார், கொடைக்கானல் கடை ரூபாய் செல்போன் கொள்ளை பூட்டு உடைப்பு, கொடைக்கானல் கோடை விழா தொடக்கம், கொடைக்கானல் கோடை விழா மலர் கண்காட்சி, வத்தலக்குண்டு
வத்தலக்குண்டு பகுதியில் கலெக்டர் ஆய்வு
வத்தலக்குண்டு, பிப். 4-
 
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் நாகராஜன் திடீரென்று வத்தலக்குண்டு ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக்கில் வனத்துறை சார்பில் நடப்பட்ட 3,500 மரக்கன்றுகளை பார்வையிட்டு நிர்வாகத்தினரிடம் மரக்கன்றுகளை காயவிடாமல் தினமும் நீர் ஊற்றி தகுந்த முறையில் பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
 
பின்னர் வத்தலக்குண்டு ஒன்றியம் மேட்டூரில் முதல் -அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளை கலெக்டர் நாகராஜன் ஆய்வு செய்தார். அதன் பின்னர் வத்தலக் குண்டு புதுப்பட்டியில் உள்ள அரசினர் மகளிர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களிடம் குறை நிறைகளை கேட்டறிந்தும், அரசு தங்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.  
 
மேட்டூர் பகுதியை சேர்ந்த முருகன், அழகன், மொட்டையாண்டி ஆகியோர் தங்களுக்கு தகுதி இருந்தும் கடந்த ஆட்சி முதல் இதுவரை முதியோர் உதவித்தொகை கிடைக்க வில்லை என்று கூறினார்.
 
இந்நிகழ்ச்சிகளில் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அருள்சேகரன், ஒன்றிய குழு தலைவர் மோகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் உதயகுமார், ராமமூர்த்தி, பேரூராட்சி துணைத் தலைவர் பீர்முகம்மது மற்றும் பெரியண்ணன், செல்லப்பாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்.