Recommendations
Recent Activity
அரியலூரில் நகை கடையில் தங்க காசுகள் கொள்ளை: மின் தடையை பயன்படுத்தி வாலிபர் துணிகரம்
அரியலூர், பிப். 4-

அரியலூர் கடை வீதியில் சுந்தர விலாஸ் என்ற பெயரில் நகை கடை நடத்தி வருபவர் சுந்தர்ராமன். இவர் நேற்று மாலை சொந்த வேலை விசயமாக சென்னைக்கு சென்று விட்டார். கடையில் அவரது மனைவி மரகத வள்ளி இருந்தார்.

அரியலூர் கடை வீதி பகுதியில் மாலை 6.45 மணி முதல் 7.30 மணி ஏற்படும். மாலை 6.30 மணி அளவில் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் மரகவள்ளியிடம் தங்க காசு வேண்டும் என்று கேட்டார். உடனே மரகதவள்ளி தங்க காசு டப்பாவை அந்த வாலிபர் முன்பு எடுத்து வைத்தார். சரியாக 6.45 மணி அளவில் மின் தடை ஏற்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர் தங்க காசுகளை அவர் கொண்டு வந்த பையில் கொட்டிவிட்டு அங்கிருந்து ஓடினார். அதிர்ச்சி அடைந்த மரகத வள்ளி கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர் தங்க காசுகளுடன் ஓடிவிட்டார். 12 1/2 பவுன் தங்க காசுகளை அவன் அபேஸ் செய்து உள்ளான்.