சென்னை, பிப்.4-
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி சார்பாக விளையாட்டுகளில் ஆர்வத்தையும், திறனையும் ஊக்குவிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாநக ராட்சிகளின் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர் களுக்கு விளையாட்டுப் போட்டிகள் 7-ந்தேதி முதல் ஒரு வாரம் நடக்கிறது.
சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 100 மீ, 200 மீ, 400 மீ, குண்டு எறிதல், கேரம் செஸ், இறகுப்பந்து, கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, எறிபந்து, கிரிக்கெட், டென்னிஸ், வலைபந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெறுகிறது.
10 மாநகராட்சிகளின் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 100 மீ, 200 மீ, 400 மீ, குண்டு எறிதல், கேரம், செஸ், இறகுப் பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் ஜெயலலிதா உள் விளையாட்டரங்கம் மற்றும் நேரு விளையாட் டரங்கிலும் 13 மற்றும் 14-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்குகிறார்.
போட்டியை அமைச்சர் கே.பி.முனுசாமி தொடங்கி வைத்து பரிசுகள் வழங்கு கிறார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.