ஜுபா, பிப். 4-
சமீபத்தில் சூடானில் இருந்து பிரிந்த தெற்கு சூடானில் அடிக்கடி கலவரங்கள் ஏற்படுகின்றன. சமீபத்தில் மாயன்டிட் நகரில் நடந்த மோதலில் 74 பேர் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து நேற்று அங்கு சமாதான கூட்டம் நடத்தப்பட்டது.
அங்கு 4 வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் வந்து இறங்கினர்.
அவர்கள் கூட்டத்தினர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசாரும், ராணுவ வீரர்களும் தாக்கினர். இதனால் அங்கு இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
அதில் 37 பேர் பலியாகினர். அவர்களில் பெரும்பாலானவர்கள் போலீசார் அடங்குவர். மர்ம நபர்கள் சுட்டதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். துப்பாக்கி சண்டை யின்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் சிதறி ஓடினர்.