நடிகை ஜெனிலியாவுக்கும் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குக்கும் மும்பை சாந்தா குரூசில் உள்ள கிராண்ட் ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நேற்று திருமணம் நடந்தது. மராட்டிய பாரம்பரிய முறைப்படி வேத மந்திரங்கள் ஓத ஜெனிலியாவுக்கு ரிதேஷ் தாலி கட்டினார்.
திருமணத்தையொட்டி ஆட்டம், பாட்டம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
மராட்டிய கவர்னர் சங்கர நாராயணன் முதல் மந்திரி பிரிதிவிராஜ் சவான் சரத்பவார், ராஜ்தாக்கரே, நடிகர்கள் அபிஷேக் பச்சன், ஷாருக்கான், அஜய் தேவ்கான் அக்ஷய் குமார், சஜித்கான், நடிகைகள் அசின், கஜோல், ஜெயாபச்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்தினர்.
திருமணத்துக்கு வந்தவர்களை மணமகனின் தந்தையும், முன்னாள் முதல் மந்திரியுமான விலாஸ் ராவ்தேஷ்முக் உள்ளிட்ட உறவினர்கள் வரவேற்றனர்.
ஜெனிலியா- ரித்தேஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சாந்தா குரூசில் உள்ள கிராண்ட் ஹயாத் நட்சத்திர ஓட்டலில் இன்று மாலை நடக்கிறது. இதில் தமிழ், தெலுங்கு நடிகர், நடிகைகள் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார்கள்.