Recommendations
Recent Activity
திருப்பதி கோவிலில் பெண்கள் இறுக்கமான ஆடை அணிய தடை
நகரி, பிப். 4-

திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

கடந்த சில ஆண்டுகளாக திருப்பதி கோவிலுக்கு வரும் சில பெண்கள் இறுக்கமான பேண்ட்-டிசர்ட் அணிந்து வருகிறார்கள். இதேபோல் சில இளம் பெண்கள் துப்பட்டா இல்லாமல் சுடிதார் அணிந்து வருகிறார்கள். இனி இதுபோல் ஆடை அணிந்து வரும் பெண்களை தரிசனத்திற்கு அனுமதிக்க மாட்டோம். பெண்கள் கண்டிப்பாக புடவை அல்லது துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்துதான் கோவிலுக்கு வரவேண்டும்.

ஆண்கள் லுங்கி அணிந்து கோவிலுக்கு வரக்கூடாது. வேட்டி-சட்டை, அல்லது பேண்ட்-சட்டை அணிந்து தான் தரிசனத்திற்கு வரவேண்டும். இந்த ஆடை கட்டுப்பாடு சில மாதங்களுக்கு முன்பே கொண்டுவரப்பட்டது. தற்போது அதை தீவிரமாக அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஆடை கட்டுப்பாட்டை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பதியை சேர்ந்த திரிதண்டி சின்ன ஜீயர் சுவாமிகள் கூறியதாவது:-

திருப்பதி கோவில் தற்போது நள்ளிரவு வரை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழுமலையானுக்கு போதிய ஓய்வு கிடைக்காமல் போய் விடுகிறது. எனவே கோவிலை தினமும் இரவு 10 மணிக்கு மூட வேண்டும். இதுபற்றி தேவஸ்தான நிர்வாகிகளிடம் கலந்து பேசி விரைவில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.