திருக்கோவிலூர் அருகே ஆட்டோவில் சென்ற பெண் ஊழியரிடம் பணம், செல்போன் பறிப்பு: டிரைவர் கைது
Villupuram
வெள்ளிக்கிழமை,
பெப்ரவரி 03,
10:58 PM IST
0
கருத்துக்கள்
திருக்கோவிலூர்,பிப்.3-
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள நல்லாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சத்யா (வயது 19). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு மருந்து கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் விழுப்புரத்தில் பணியை முடித்துக்கொண்டு பஸ்சில் ஏறி கண்டாச்சிபுரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். அங்கிருந்து தனது ஊருக்கு செல்ல ஒரு ஆட்டோவில் ஏறினார். ஆனால் ஆட்டோ டிரைவர் சத்யாவின் கிராமத்திற்கு செல்லாமல் வேறு வழியாக செல்வதை அறிந்த சத்யா காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட் டார்.
உடனே ஆட்டோ டிரைவர் சத்யாவிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.3 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீசில் சத்யா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் செஞ்சி தாலுகா புது கருவாட்சியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ரமேஷ் (36) ஆட்டோ டிரைவர் தான் சத்யாவிடம் இருந்து செல் போன், பணத்தை பறித்தது தெரியவந்தது.பின்னர் கண்டாச்சிபுரம் போலீசார் ஆட்டோ டிரைவர் ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
கருத்துக்கள்