ரூ. 1.5 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்பு: பி.எஸ்.என்.எல். பிரிவு கண்காணிப்பாளர் கைது
New Delhi
வெள்ளிக்கிழமை,
பெப்ரவரி 03,
8:26 PM IST
1
கருத்துக்கள்
புதுடெல்லி,பிப். 3 -
பெங்களூருவில் உள்ள பிஎஸ்என்எல் பிரிவு கண்காணிப்பாளர் துளசிராமா வீட்டில் சோதனை மேற்கொண்டதில் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. இன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, ஐ.பி.சி. மற்றும் ஊழல் தடுப்பு சட்ட பிரிவின் கீழ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காக துளசிராமா மற்றும் அவருடைய மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு விஜயநகரில் உள்ள அவரது குடியிருப்பு வளாகத்தை சோதனை செய்ததில் ரூ. 57 லட்சம் மதிப்புள்ள பணமும், வங்கி கணக்கில் ரூ. 25 லட்சமும், ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்களும், ரூ. 14 லட்சம் மதிப்புள்ள நகைகளும் இதர பொருட்களும் மீட்கப்பட்டதாக சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
1
கருத்துக்கள்