Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
அணுமின் நிலையம் பணி இடிந்தகரை வாலிபர் போராட்ட குழு தாக்குதல், அணுமின்நிலையம், அத்தியூத்து சாலை கிணறு விபத்து அரசு, அதிகாரி பேச்சுவார்த்தை கூடங்குளம் போராட்டக்குழு, அம்பை கடன் பெண் பணம் மோசடி ஆலங்குளம் பெண் கைது, அரசுடன் பேச்சுவார்த்தை நீதிபதி ஏ.பி.ஷா நால்வர் குழு கூடங்குளம் போராட்டக்குழு அறிவிப்பு, ஆலங்குளம், ஆலங்குளம் குளம் குத்தகை தொடர் மோதல் அரிவாள் வெட்டு, ஆலங்குளம் டெங்கு காய்ச்சல் அம்மன் பொங்கல் வழிபாடு, ஆலங்குளம் மினி பஸ் மோதி கல்குவாரி தொழிலாளி சாவு, இடிந்தகரை அணு உலை போராட்டம் வெற்றி சீமான், இடிந்தகரை பொதுமக்கள் ஊர்வலம் உதயகுமார், இருவர், சங்கரன்கோவில், நெல்லை
கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு ஆதரவாக பாளையில் காங்.சார்பில் நாளை பொதுக்கூட்டம்: மத்திய மந்திரிகள் சிதம்பரம், வாசன் பங்கேற்பு
நெல்லை, பிப். 3-

கூடங்குளம் அணுமின்நிலையத்தை திறக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை (சனிக்கிழமை) பாளை ஜவகர் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமை தாங்குகிறார். ராமசுப்பு எம்.பி. வரவேற்கிறார். மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், நாராயணசாமி, முன்னாள் மாநில தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு, குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, முன்னாள் மத்திய மந்திரிகள் திருநாவுக்கரசர், தனுஷ்கோடி ஆதித்தன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா உள்ளிட்ட தலைவர்கள் பேசுகின்றனர்.

எம்.எல்.ஏ.க்கள் ஜான்ஜேக்கப், விஜயதாரணி, பிரின்ஸ் மற்றும் எம்.பி.க்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி நெல்லை மாநகரம் முழுவதும் கொடி தோரணங்கள், டிஜிட்டல் பேனர்கள் கட்டப்பட்டு உள்ளன. நெல்லை டவுண் ஆர்ச் முதல் மார்க்கெட் வரையும், பாளை பஸ் நிலையம் முதல் சமாதானபுரம் வரையும் காங்கிரஸ் கொடிகள், தலைவர்கள் படங்களுடன் கூடிய வரவேற்பு பேனர்கள் கட்டப்பட்டு உள்ளன.

7 இடங்களில் மின் கோபுர விளக்குகள், 50 இடங்களில் ரவுண்ட் ஆர்ச்சுகள் அமைக்கப்பட உள்ளன. ஜவகர் மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட உள்ளது. கூட்ட மைதானத்தில் காமராஜர், இந்திரா, சோனியா, ராகுல், பிரதமர் மன்மோகன்சிங், மூப்பனார் மின் அலங்கார கட்- அவுட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

கூட்டத்துக்கு வரும் மூத்த தலைவர்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட உள்ளது. பொதுக்கூட்ட மேடையை சுற்றி இளைஞர் காங்கிரஸ் அமைப்பை சேர்ந்த 100 பேர் சிறப்பு சீருடை அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இருந்து தொண்டர்களை அழைத்து வர நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.