Recommendations
Recent Activity
சேலம் அருகே ரெயில் நிலையத்தில் எல்.ஐ.சி. ஊழியர் பிணம்: ரெயில் ஏற வந்தபோது தவறிவிழுந்தாரா?
சேலம், பிப். 2-

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணத்தை அடுத்த மின்னாம்பள்ளி ரெயில் நிலையத்தின் 2-வது பிளாட் பாரத்தில் இன்று காலை ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதுப்பற்றி தெரியவந்ததும் சேலம் ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது பிணமாக கிடந்தவர் வாழப்பாடி இந்திரா நகரை சேர்ந்த ரவிக்குமார் (49) என்பதும் இவர் சேலம் ஜான்சன் பேட்டை எல்.ஐ.சி. அலுவலகத்தில் கிளார்க்காக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும் இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதும் தெரியவந்தது. எனவே இவர் ரெயில் ஏற வந்த போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது எப்படி இறந்தார் என்று ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து ரவிக்குமாரின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர். ரெயில் நிலையத்தில் பிணம் கிடந்த தகவல் தெரியவந்ததும் அந்த பகுதியில் ஏராளமான கூட்டம் கூடியது.