Recommendations
Recent Activity
சொத்து குவிப்பு வழக்கு: முலாயம் சிங்கை மத்திய அரசு பாதுகாக்கிறது
லக்னோ,பிப். 3-
 
முலாயம் சிங்கின் சொத்து குவிப்பு வழக்கு விவகாரத்தில் மத்திய அரசு அவரை பாதுகாத்து வருவதாக கடந்த 2007-ம் ஆண்டு முலாயம் சிங் மீது உச்சநீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கைத் தொடர்ந்த வழக்கறிஞர் விஸ்வநாத் சதுர்வேதி இன்று தெரிவித்தார்.
 
மத்திய அரசுக்கும் முலாயம் சிங்கிற்கும் இடையே குற்றவியல் தொடர்பு இருப்பதாக கூறிய அவர் மத்திய அரசின் கட்டளையின் பேரில் இந்த வழக்கில் சி.பி.ஐ. மந்தமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
 
கடந்த 2005-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வராக முலாயம் சிங் யாதவ் இருந்த பொழுது லக்னோ கோமதி நகரில் உள்ள விபுல் கஹாந்தில் ரூ. 2.80 கோடி மதிப்புள்ள 28 குடியிருப்புக்களை பங்கீடு செய்த விவகாரத்தில் உயர்மட்ட விசாரணையை மேற்கொள்ளும்படி வழக்கறிஞர் மனுதாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.