ஆண்டிப்பட்டி அருகே கணவரை பிரிந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
Theni
வெள்ளிக்கிழமை,
பெப்ரவரி 03,
6:07 PM IST
0
கருத்துக்கள்
ஆண்டிப்பட்டி, பிப். 3-
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்த மயிலாடும்பாறை அருகே உள்ள வனத்தாய்புரத்தை சேர்ந்தவர் செல்வி (வயது 28). இவரது கணவர் பெரியசாமி. இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வி தனது குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் செல்விக்கும், அவரது தாய்க்கும் குழந்தைகளை பார்ப்பதில் தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று தாய்-மகள் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த செல்வி விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிசிக்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் குறித்து மயிலாடும்பாறை சப்- இன்ஸ்பெக்டர் சகாதேவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
0
கருத்துக்கள்