Recommendations
Recent Activity
பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்
மன்னார்குடி,பிப்.3-

மன்னார்குடி நகர் பகுதியில் நகர சுகாதார திட்டத்தின் கீழ் பிரதி வாரம் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் வார்டு வாரியாக சிறப்பு கூட்டு துப்புரவு பணி மேற்கொள்ள எடுக்கப்பட்ட முடிவின் படி வார்டு எண்.28 கே.கே.நகரில் சிறப்பு கூட்டு துப்புரவு பணியினை நகர மன்ற தலைவர் சுதாஅன்புச்செல்வன் துவங்கி வைத்து பேசியதாவது-

இந்த சிறப்பு கூட்டு துப்புரவு பணி வாரம் இரு நாட்களிலும் ஒவ்வொரு வார்டாக அனைத்து வார்டுகளிலும் நடைபெறும் பொது மக்கள் குப்பைகளை தெருக்களில கொட்¢டாமல் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து வீட்டிற்கு வரும் துப்புரவு பணியாளர்களிடம் கொடுப்பதுடன் சுற்றுசூழலுக்கு கேடு விளைக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து நகரை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பேசினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் ஆணையர் (பொ) சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் இரா.சுவாமிநாதன் நகர் மன்ற உறுப்பினர்கள் தெய்வேந்திரன், ஏ.ஆனந்த ராஜ், வி.கண்ணதாசன் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அன்புச்செல்வன் மற்றும் சுகாதார துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.