Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
80 அடி சாலை எதிர்ப்பு ஈரோடு கலெக்டர் முற்றுகை கிறிஸ்தவர், அந்தியூர் பர்கூர் வனப்பகுதிமழை, அந்தியூர் வனப்பகுதி விவசாயி மிதித்து யானை பொதுமக்கள் பட்டாசு வெடித்து விரட்டினர், அம்மாபேட்டை தொழிலாளி தற்கொலை, அம்மாபேட்டை பிளஸ்-2 மாணவி மாயம், அரச்சலூர் அம்மன் கோவில் தேரோட்டம், அரச்சலூர் அம்மன் கோவில் குண்டம் விழா, அரசு ஆஸ்பத்திரி டீன் மனைவி ரெயில் தற்கொலை, அலுவலகம், ஆலங்கட்டி மழை சூறாவளி வாழை பப்பாளி பயிர்கள், இன்று, இளைஞர் காங்கிரஸ் மோதல் அடிதடிவாக்குவாதம், ஈரோடு கலெக்டர் அலுவலகம் கேண்டீன் பணம் திருட்டு, ஈரோடு நகைகள் கொள்ளை கொள்ளையர்கள் அட்டூழியம், ஈரோடு ரெங்கம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கோவில் நிலத்தை மீட்ககோரி 4 ஆயிரம் பக்தர்கள் பால்குட ஊர்வலம்
ஈரோடு, பிப். 3-
 
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்க வேண்டும். பன்னீர்செல்வம் மேம்பால திட்டத்தை கைவிட வேண்டும், 80 அடி சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில் ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு இருந்து இன்று பால்குட ஊர்வலம் நடந்தது.  
 
இதில் சுமார் 4 ஆயிரம் பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். திருவேங்கடசாமி வீதி, பிரப்ரோடு வழியாக வந்த இந்த ஊர்வலம் பெரிய மாரியம்மன் கோவிலை அடைந்தது. அங்கு வரிசையில் நின்ற பக்தர்கள் அம்மனுக்கு பால்குட அபிசேகம் செய்தனர்.
 
பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்க தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடந்த இந்த ஊர்வலத்தில் திட்டக்குழு தலைவர் சந்திரசேகர், துணை தலைவர் கைலாச பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.  
 
4 ஆயிரம் பக்தர்கள் பால்குடம் ஏந்தி வந்ததையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வம் நேரடி மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.