Recommendations
Recent Activity
கலசப்பாக்கம் அருகே ஊருக்குள் புகுந்து யானை கூட்டம் மீண்டும் அட்டகாசம்: வாலிபரை தூக்கி வீசியது
கலசப்பாக்கம், பிப்.3-

கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஜமுனாமரத்தூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் யானை கூட்டம் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும், மேலும் சில வீடுகளையும் இடித்தும் தள்ளின. நேற்று முன்தினம் நள்ளிரவு யானைக்கூட்டம் மேல் சோழங்கு?பம் மலையடிவாரத்திற்கு வந்துள்ளது.

அவற்றை வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்தும், தீப்பந்தங்களை கொண்டு பொதுமக்களும் விரட்டியடிக்க முயற்சித்தனர். பட்டாசு சத்தம், தீப்பந்த ஒளியை கண்டதும் மிரண்டு ஆவேசமடைந்த யானைக் கூட்டம் கிராம மக்களை விரட்ட தொடங்கியது.

இதனால் பீதியடைந்த பொது மக்கள் சிதறி ஓடினர். மேல்சோழங்குப்பம் புதுத்தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது55), விவ சாயியை யானை மிதித்து கொன்றது பின்னர் மீண்டும் யானைக் கூட்டத்தை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் வனத் துறையினரும், கிராம மக்களும் ஈடுபட்டனர்.

இருப்பினும் யானைக்கூட்டம் வாழை, நெல், மணிலா, கரும்பு போன்ற பயிர்கள் விளைவிக் கப்பட்டிருந்த சுமார் 5 ஏக்கர் விவசாய நிலங்களை சேதப்படுத்தி விட்டு பின்னரே காட்டுக்குள் சென்றன. மீண்டும் யானை கூட்டம் ஊருக்குள் புகுந்து விடுமோ என்று கிராமமக்கள் பீதி இருந்தனர். இதனால் மேல் சோழங்குப்பம் கிராமத்தில் வனத்துறையினர் முகாமிட்டு இருந்தனர்.

ஆனால் யானை கூட்டம் நேற்று இரவு நவாப்பாளையம், அய்யம்பாளையம், விடாம் பாளையம் கிராமங் களுக்கு புகுந்தன. அங்கு கரும்பு தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் கரும்பு மற்றும் பயிர்களை நாசப்படுத்தின. இதுகுறித்து வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது.

வனத்துறையினர், கிராமமக்கள் யானைகளை காட்டுக்குள் விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது சரவணன் (27) என்பவரை யானை ஒன்று தும்பிக்கையால் பிடித்து தூக்கியது. அவர் யானை பிடியில் இருந்து தப்பிக்க திமினார்.

இதில் சரவணன் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். யானை கூட்டம் காட்டுக் குள் செல்லாமல் மலையடி வாரங்களிலேயே சுற்றுவதால் கிராமமக்கள் பீதியடைந்துள்ளனர். வெளியே வரவே அஞ்சுகிறார்கள்.