Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
அக்னி நட்சத்திரம்வேலூர் 108 டிகிரி வெயில், அணைக்கட்டு சிறுசேமிப்பு திட்டம் போஸ்ட்மேன் சஸ்பெண்டு, அதிகாரி முயற்சி மணல் கடத்தல் கும்பல் தனிப்படை அமைப்பு, அரக்கோணம் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் தீ, அரக்கோணம் பேண்ட் பை மதுபாட்டில் வாலிபர் சாவு, அரக்கோணம் ரெயில் நிலையம் சரக்கு ரெயில் தடம் புரண்டது, ஆட்டோ டிரைவர் வாலாஜாபேட்டை ராணிப்பேட்டை, ஆம்பூர் திருவலம் திருப்பத்தூர் சர்க்கரை ஆலை ஊழியர்கள் மறியல், ஆம்பூர் பெண் குழந்தை பன்றி காய்ச்சல் ஆஸ்பத்திரி சிகிச்சை, ஆம்பூர் லாரி டிரைவர் கத்தி குத்தி நகை பணம் கொள்ளை, ஆஸ்பத்திரி சிலிண்டர் பெண் பலி பிரேத பரிசோதனை, இளம்பெண் தற்கொலை காதலன் வாக்குமூலம், இளம்பெண் தற்கொலை ஊராட்சி மன்ற தலைவர் தந்தை, இளைய ஆதினம் பதவி நித்யானந்தா அகில பாரத அனுமன் சேனா நிறுவனம் தலைவர், என்ஜினீயரிங்
வாணியம்பாடி அருகே வரதட்சணை சித்ரவதையில் இளம்பெண் எரித்து கொலை?; கணவன், மாமியார் கைது
வாணியம்பாடி, பிப்.3-

வாணியம்பாடி அருகே வரதட்சணை சித்ரவதையில் இளம்பெண் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக கணவன், மாமியார் கைது செய்யப்பட்டனர். வாணியம்பாடியை அடுத்த மதனாஞ்சேரியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது24), கட்டிட மேஸ்திரி. இரவது மனைவி ஷோபனா (வயது21), கடந்த 1 1/2 ஆண்டுக்கு முன்பு இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

மணிகண்டனும் அவரது தாயார் பொன்னியும் சேர்ந்து ஷோபனாவிடம் உனது தாயார் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வா என்று கூறி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 30-ந் தேதி ஷோபனா வீட்டில் உடல் கருகிய நிலையில் அலறி துடித்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக அவரை வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உதவி கலெக்டர் (பொறுப்பு) சாந்தா விசாரணை நடத்தினார்.

அவரிடம் ஷோபனா அளித்த வாக்குமூலத்தில் கணவனும், மாமியாரும் சேர்ந்து மண்எண்ணை ஊற்றி தீ வைத்தனர் என்று கூறியுள்ளார். இதற்கிடையில் ஷோபனா சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக வாணியம் பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன் அவரது தாயார் பொன்னி (வயது50), ஆகியோரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.