Recommendations
Recent Activity
2-வது 20 ஓவர் போட்டி: இந்தியா வெற்றி
மெல்போர்ன், பிப். 3-
 
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மெல்போர்னில் இன்று மதியம்   தொடங்கியது.  இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
 
அதன்படி தொடக்க வீரர்களாக வார்னரும்,  பிஞ்ச் களம் இறங்கி விளையாடி வந்தனர்.  பிரவீண்குமார் வீசிய 3-வது ஓவரில் வார்னர் 8 ரன் அடித்திருந்த போது  காம்பீரிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த மார்ஷ் ரன் எதுவும் எடுக்காமல் பெவுலியன் திரும்பினார்.
 
அடுத்ததாக வந்த ஹஸ்சி, பிஞ்ச்சுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். இருவரும்  அடித்து ஆடி ரன் சேர்த்தனர். சிறப்பாக விளையாடி வந்த பிஞ்ச் 7-வது ஓவரில் 36 ரன்னில் அவுட் ஆனார்.
 
பின்னர் வந்த பெய்லி 3 ரன்னில் ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன் பின் வந்த வாடே அதிரடிய விளையாடி 36 ரன்னில் ரன் அவுட்டானார். அதை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறி அவுட் ஆனார்கள். 
 
இறுதியாக ஆஸ்திரரேலிய அணி 19.4 ஓவர்களில்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்னில் சுருண்டது. இந்திய பந்து வீச்சாளர்கள் தரப்பில் அதிக பட்சமாக  பிரவீண்குமார் 2 விக்கெட்டும், ராகுல் சர்மா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
 
பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  களம் இறங்கிய இந்திய அணி. தொடக்க வீரர்களாக காம்பீர்,சேவாக்கும் களம் இறங்கி விளையாடினர் இருவரும் தொடக்கத்திலேயே அடித்து விளையாடி வந்தனர்.  சிறிது நேரத்தில் காமபீர் அரை சதம் அடித்தார் 7-வது ஓவரில் சேவாக் 23 ரன்னில் அவுட் ஆனார்.
 
அடுத்து வந்த கோக்லி அதிரடியாக விளையாடி 24 பந்துகளை சந்தித்து 31 ரன் அடித்து கேட்ச் ஆனார். பின்னர் வந்த கேப்டன் டோனி, காம்பீருடன் ஜோடி சேர்ந்து விளையாட இறுதியாக இந்திய அணி 19.4 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 135 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி முலம் இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதல் வெற்றி ருசித்துள்ளது.
 
கேப்டன் டோனி 21 ரன்னுடனும், காம்பீர் 56 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.